Tuesday, July 13, 2010
மிளகாய் சாகுபடியில் இயற்கை வேளாண்மை நுட்பங்கள்
நாற்றங்கால் தயாரிப்பு : மேட்டுப் பாத்திகளின் மீது நுண்ணுயிர் கலவை உரம் சீராக தூவி மேல் மண்ணை லேசாக கிளறி 7 - 10 செ.மீ., ஆழம் வரை மேல் மண்ணுடன் கலந்து, நன்கு கலந்து விட வேண்டும்.
நுண்ணுயிர் கலவை உரம் தயாரித்தல் : தேவையான பொருட்கள் - சோற்றுக் கற்றாழை 2 கிலோ, செம்பருத்தி 1 கிலோ, கருவேப்பிலை 1 கிலோ, சவுக்கு இலை 1 கிலோ, பிரண்டை 1 கிலோ, துளசி 1 கிலோ, எருக்கு 1 கிலோ, நொச்சி 1 கிலோ, வேம்பு - 1 கிலோ (மொத்தம் 10 கிலோ), தண்ணீர் 10 லிட்டர் நாட்டுச் சர்க்கரை - 400 கிராம் மற்றும் பெருக்கிய இஎம்-இஎம்2 400 மிலி.
இளம் தளிர்களாக எடுத்து சிறு துண்டுகளாக்கி இடித்து சாற்றை ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இட்டு அதன் மேல் கனமான கல் வைத்துவிட வேண்டும். தண்ணீரில் நாட்டுச் சர்க்கரை, இஎம்2 கரைசல் ஆகியவற்றை கலந்து டிரம்மில் ஊற்றி மூடி 10 நாட்கள் நொதிக்க விட வேண்டும். இதனை எடுத்து 3 மாதம் வரை பயன்படுத்தலாம். தேவையான போது தேவையான அளவு எடுத்து பயன்படுத்தலாம். இதனை நுண்ணுயிர் கலவை உரம், பாசன நீரில் கலந்து மற்றும் இலைவழி ஊடகமாக தெளிப்பதற்கு என 3 வகைகளில் பயன்படுத்தலாம்.நொதித்த செடிச்சாரத்தில் பயிருக்கு தேவையான அனைத்து நுண் சத்துக்கள் மற்றும் அனைத்து வகை பூசண நோய்களை யும் தாங்கி வளரும் தன்மையும் உண்டாக்கும். இந்த கலவைக்கு பெயர் நொதித்த செடிச்சாரம் ஆகும்.
கலவை உரம் தயாரித்தல் : தேவை யான பொருட்கள்: மட்கு எரு / மண் புழு எரு 10 கிலோ, உமி சாம்பல் / சாம்பல் 10 கிலோ, மரத்தூள் 20 கிலோ (மொத்தம் 100 கிலோ) உயிர் உரங்கள் - அசோஸ்பைரில்லம் - லீ கிலோ, பாஸ்போ பாக்டீரியா - லீ கிலோ, பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா லீ கிலோ வேம் 1 கிலோ.
அழுகல் நோய் கட்டுப்படுத்த - சூடோமோனாஸ் புளோரசன்ஸ் லீ கிலோ, டிரைகோடெர்மா விரிடி லீ கிலோ.
நூற்புழு கட்டுப்படுத்த : பைசிலோ மைசிஸ் - லீ கிலோ.
வேற்புழு கட்டுப்படுத்த: பவோரியா பிராங்னியாக்ட்டி - லீ கிலோ, மெட்டாரைசம் - லீ கிலோ.
வளர்ச்சி ஊக்கி கரைசல்கள் : தொல்லுயிர் கரைசல் 10 லிட்டர், பஞ்சகவ்யா 10 லிட்டர், அடர் அமுதகரைசல் 5 லிட்டர், தேமோர் அல்லது அரப்பு மோர் அல்லது சீகைக்காய் மோர் 5 லிட்டர், நொதித்த செடிச்சாரம் 10 லிட்டர், பெருக்கிய இஎம் (இஎம்2) 1 லிட்டர்.
மட்கு எரு, சாம்பல் மற்றும் மரத்தூள் ஆகியவற்றை நன்கு கலக்கி கலவை தயார் செய்து குவியலாக்கி, அதன் மேல் உயிர் உரங்கள், சூடோ மோனாஸ், டி.விரிடி, பைசிலோ மைசிஸ் மற்றும் பயோரியா பிராங்னியாக்ட்டி, மற்றும் மெட்டாரைசம் ஆகியவற்றை சீராகத்தூவி கலவையை நன்கு பிரட்டி குவியலாக்கி, அதில் கூம்புப் பகுதியில் அரைவட்ட கிண்ணம் போல் குழி உருவாக்கி அதில் வளர்ச்சி ஊக்கி கரைசலை ஊற்றி ஒரு இரவு வைத்திருந்து அதற்கு அடுத்த நாள் காலை நன்கு பிரட்டி சீரான ஈரப்பதம் உள்ள கலவை தயாரிக்க வேண்டும். இந்த கலவையை தயாரித்த அன்றே பயன்படுத்தலாம். அல்லது கலவை உரத்தை குவியலாக்கி ஈரச்சாக்கு கொண்டு மூடி வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம். தகவல்: எஸ்.ஆர்.சுந்தரராமன், இயற்கை வேளாண் வல்லுனர், சத்தியமங்கலம்)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன். தமிழ்நாடுவிவசாயம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment