Friday, July 09, 2010


மாடு வளர்ந்தாலும் பூமி வெப்பம் அடைவதை தடுக்கலாம்

தற்போது உலகை அச்சுறுத்தும் முக்கிய பிரச்சினை தட்பவெப்பமடைதல். பூமி வெப்பமடைவதால் தட்பவெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு கோடை காலத்தில் மழை பெய்கிறது. மழைக்காலத்தில் மண்டையைப் பிளக்கும் வெயிலடிக்கிறது. பூமியின் இயற்கையான தன்மை மாறுபடுவதால்தான் சுனாமி சூறாவளி புயல் ஆகியவை பெரும் சேதத்தை விளைவிக்கின்றன.
பசுமைத்தன்மை இல்லாத கார்பன்டை ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்களின் பெருக்கமும், ரசாயனத் தொழிற்சாலைகளில் நச்சு மாசு கலந்த கழிவு நீரும் பூமி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம். பூமி வெப்பமடைவதைத் தடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஐ.நா.சபை இதற்காக சர்வதேச அளவிலான தட்பவெப்பநிலை கொள்கைகளை 1997 ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் அறிவித்தது.

இக்கொள்கையை அனைத்து நாடுகளும் அமல்படுத்தாவிட்டால் புவிவெப்பமடைவதால் உருகும் வடதுருவ, தென்துருவ பனிமலைகள் கடலோர நகரங்களை விழுங்கும் அளவிற்கு கடலின் நீர்மட்டம் உயர்ந்துவிடும். இந்தியாவைப் பொறுத்தளவில் கடல்நீர் மட்டும் உயர்ந்தால் நிலத்தடி நீர் உவர்நீராக மாறி காலப்போக்கில் கடல்நீரைப் போல உப்பாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதோடு, விவசாய விளைபொருள் உற்பத்தி பாதிக்கும்.

ஆகவே பூமி வெப்பமடைவலைத் தவிர்க்க மத்திய மாநில அரசு பல்வேற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பூமி வெப்பமடைவதைத் தடுக்க காடுகளை உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பில் 2.30 சதவிகித பரப்பில் மட்டுமே காடுகள் உள்ளன. இதை 3.90 சதவீகிதமாக உயர்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பூமி வெப்பமடைவதைத் தடுக்க காடுகள் வளர்ப்புத் திட்டம் பலன் அளிப்பது போல கால்நடைகள் வளர்ப்பதும் பலன் அளிக்கும் என்று அமெக்க தன்னார்வ இயற்கை ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வு நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு ஆய்வுகளை நடத்தியது. தமிழகத்தில் மகளிர் குழுக்கள் பால்தரும் பசுகள் உள்ளிட்ட கால்நடைகளை அதிகமாக வளர்ப்பதும்கூட பூமி வெப்பம் அடைவதைத் தவிர்க்க உதவியுள்ளதாக ஆய்வுகளில் தெய வந்துள்ளது.
மேலும், இந்தியாவில் பண்டைகாலம் முதல் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை சுனாமி பூமி அதிர்ச்சி போன்ற சீற்றங்கள் பெருமளவில் நிகழவில்லை. இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் நிகழும்போது பூமியின் இயற்கை அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் மாற்றங்கள் நிகழும் குறிப்பாக பிரளயங்கள், பூமி அதிர்ச்சி ஆகியவை ஏற்படும்பொழுது மனிதர்களும் மரங்களைக் கொண்ட காடுகளும் பூமிக்குள் புதையுண்டு விடும்.

இவ்வாறு புதையுண்ட நகரங்களில் வசித்த மனிதர்கள் பூமியின் வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் காலப்போக்கில் பெட்ரோலியமாக மாறிவிடுகின்றனர். புதையுண்ட மரங்கள் நிலக்கயாக மாறிவிடுகின்றன. ஒரு காலத்தில் புதையுண்ட மனிதர்கள் பெட்ரோலியமாக, கச்சா எண்ணெய்யாக அடுத்த தலைமுறையினருக்கு கிடைக்கின்றன.

அதேபோல பால்தருவதில் மக்களால் வளர்க்கப்படும் பசு, எருமை, ஆடு ஆகியவை மக்களால் சமநிலைக்கு வைத்திருக்க உதவுகின்றன. இந்த காலநடைகளின் கழிவு, நிலத்திற்கு இயற்கையான உரமாகிறது. பசுவின் பால், சிறுநீர், தயில் கலந்து தயாத்து பயிர்களுக்கு தெளிக்கப்படும் பஞ்ச கவ்யம் எவ்வித வேதியியல் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

கால்நடைகள் உணவுடன் அதன் வயிற்றுக்குள் செல்லும் செடி, கொடிகளின் விதைகள், அவற்றின் உடல்வெப்பம் மற்றும் அழுத்ததால் பதப்படுத்தப்படுகிறது. இந்த விதைகள் சாணத்துடன் பூமியில் விழுந்து முளைக்கும்போது அதன் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு, அதிக விளைச்சல் தருகின்றன. இதைக் கண்ட தனியார் நிறுவன வேளாண் விஞ்ஞானிகள் சிலமணிநேரம் ஊற வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த விதைகளுக்கு பதப்படுத்திய விதைகள் என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் பண்டைக்காலத்தில் குளம் வெட்டுதல், மரம் நடுதல், கால்நடை வளர்த்தல் ஆகியவற்றை மன்னர்களும் மக்களும் தொடர்ந்து கடைப்பிடித்தால்தான் இந்தியாவில் இயற்கை பேரழிவுகள் பெரும் அளவில் நடைபெறவில்லை என்பதையும் இந்த ஆய்வு நிறுவனம் கூறுகிறது. நூறுபடிகள் வைத்த கிணறு ஒரு குளத்திற்குச் சமம் என்று அந்த காலத்தில் கூறுவர்கள்

தமிழர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கூறிய இந்த விஷயம் உண்மைதான் என்பதை இந்த ஆய்வு நிறுவனத்தின் நீண்ட கால ஆய்வுகளில் தெய வந்துள்ளது. ஆகவே இனிமேல் பூமியின் வெப்பத்தைத் தவிர்க்கவும். தடுக்கவும் காடுகள் மட்டுமின்றி கால்நடையும் வளர்க்கலாம்.

தமிழகத்தில் கிராமப்புற மகளிர் குழுக்களில் பல பசு, எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. இவை சுயமாக பணம் ஈட்டுவதுடன், பூமி வெப்பம் அடைவதைத் தடுக்க மறைமுகமாக உதவுகின்றன. அரசு ஒரு புறம் காடுகளை உருவாக்கட்டும்; தேசிய ஆறுகள், ஏகள் பாதுகாப்புத்திட்டம் உள்ளிட்ட பசுமை மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தட்டும்.

அதேபோல வீட்டு விலங்குகளான பசு, எருமை, ஆடு கோழி உள்ளிட்டவைகளை வளர்க்க விரும்பும் மக்களுக்கு வங்கி கடனுதவி, தொழில்நுட்ப தகவல் உதவி ஆகியவற்றை தாராளமாக வழங்கினால் பூமி வெப்பமடைவதை மேலும் பலமடங்கு தடுக்கலாம். கால்நடை வளர்ப்பதால் பூமி வெப்பமடைவதைத் தடுக்கும் புதிய திட்டமொன்றை இந்த ஆய்வு நிறுவனம் அமெக்க அதிபர் ஓபாமாவிடம் அண்மையில் அளித்துள்ளது.

No comments: