Saturday, April 03, 2010

விலைவாசி உயர்வு கணக்கிடும் முறை

சில நேரங்களில் சாக்குப் பைகளுக்கு கிடைக்கும் விலைகூட அதில் கொண்டு போகும் தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறி களுக்குக் கிடைப்பதில்லை. அத்தகைய சமயங் களில் காய்கறிகள் மற்றும் பழங்களை சாலை யிலும், சாக்கடையிலும் கொட்டிவிடுவதுண்டு.





பணவீக்கம் குறைந்தாலே விலைவாசியும் குறையும் என்று மக்கள் எண்ணுகின்றனர்.  உண்மையில் பணவீக்கம் என்பது பொருள் களின் விலை எந்த விகிதத்தில் உயருகின்றது என்பதைக் காட்டுவதே ஆகும்.
பணவீக்க விகிதத்தை அறிவிக்கும் கால அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  வாரந்தோறும் அறிவிக்கப்பட்டு வந்த பணவீக்க விகிதம் 2009 அக்டோபர் மாதம் முதல் மாதம் ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.
கணக்கிடும் முறையில் உள்ள குறைபாடு என்னவென்றால் மக்கள் பொருள்களை வாங்குவது சில்லறை விலையில் இருக்க, பணவீக்க விகிதம் இன்னமும் மொத்தவிலை அடிப்படையில் தான் கணக்கிடப்படுவதுதான்.
பொருள்களின் விலை நிலவரத்தை புள்ளிவிவரமாக தெரிவிப்பது ‘விலைக் குறியீட் டெண்’. மக்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலை அடிப்படையில் விலைக் குறியீட்டெண் கணக்கிடப்படுகிறது. இதற்கு அடிப்படை ஆண்டாக 1993-94ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 50 சதவீத அளவுக்கு விலை உயர்வு இருப்பதாகப் பொருள்.  மாறாக, 2010ம் ஆண்டின் விலைக் குறியீட்டெண் 75 என்பதாக இருந்தால் 1993-94ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் விலைவாசி 25 சதவீத அளவுக்கு குறைந்திருப்பதாகப் பொருள்.

விலைக் குறியீட்டெண்-ஐ கணக்கிட அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்தும் 435 பொருள்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படு கின்றன. இப்பொருள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.  1. உணவுப் பண்டங்கள், 2. எரிபொருள்கள், 3.

உற்பத்திப் பொருள்கள்.
முதல் பிரிவான உணவுப் பண்டங்களில் அரிசி, கோதுமை, காய்கறி, பால், பழம், எண்ணெய் உள்ளிட்ட 98 பொருள்கள் இடம் பெறுகின்றன. இரண்டாவது பிரிவில் பெட் ரோல், டீசல், மின்சாரம் போன்ற 19 எரிபொருள் கள் இடம் பெறுகின்றன.  மூன்றாவது பிரிவில் துணி, காகிதம், போக்குவரத்து சாதனங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட 318 பொருள்கள் இடம் பெறுகின்றன.

இந்த மூன்று பிரிவிற்கும் அதனதன் முக்கியத்துவம் மற்றும் பொருள்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ‘வெயிட்டேஜ்’ வழங்கப்படுகிறது. அதாவது முதல் பிரிவான உணவுப் பண்டங்களுக்கு 22 சதவீதமும், இரண்டாவது பிரிவான எரிபொருள் களுக்கு 14 சதவீதமும் வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு பொருளின் விலையையும் கணக்கெடுத்து வாரந்தோறும் விலைவாசியின் ஏற்ற இறக்கத்தை அரசு வெளியிடுகிறது. இந்த விலைக் குறியீட்டெண் ‘மொத்த விலை’ அடிப் படையில்தான் கணக்கிடப்படுகிறது. ‘சில்லறை விலை’ அடிப்படையில் கணக்கிடப்படுவது இல்லை.
இப்படி, ஓராண்டு காலத்தில் ஏற்படும் விலைவாசி உயர்வை அந்த ஆண்டின் பணவீக்கத்தின் அளவாக சொல்லப்படுகிறது.  விலைவாசியைப் பிரதிபலிக்கும் நிலைக் கண்ணாடி பணவீக்க விகிதம். பல நேரங்களில் உற்பத்தியாளர்களாக உள்ள விவசாயிகள் கடும் விலை வீழ்ச்சியை சந்திக்கிறார்கள்.

விவசாயிகள் தாங்கள் அறு வடைக்கு செலவிட்ட தொகையைக் கூட சரிகட்டாத அளவுக்கு விளைபொருள்களின் விலை சரிந்து விடுவது உண்டு.  சில நேரங்களில் அவர்களது சாக்குப் பைகளுக்கு கிடைக்கும் விலைகூட அதில் கொண்டு போகும் தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளுக்குக் கிடைப்பதில்லை.  அத்தகைய சமயங்களில் அவர்கள் வெறுத்துப்போய் தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்குக் கொண்டு செல்லாமல் சாலையிலும், சாக்கடை யிலும் கொட்டிவிடுவதை நாளிதழ்களில் பார்த்திருக்கிறோம்.
ஆனால் நுகர்வோர் அதே காய்கறிகள் மற்றும் பழங்களை கடைகளில் வாங்கும் போது அத்தகைய விலை வீழ்ச்சி இருப்பதில்லை.  ஒருவேளை விலை கொஞ்சம் குறைந்திருந்தாலும் விவசாயியிடம் மொத்தமாகக் கொள்முதல் செய்யும்போது இருக்கும் அளவுக்குக் கடுமையான விலைச் சரிவு சில்லறை விற்பனைக் கடைகளில்  இருப்பதில்லை.  போக்குவரத்து, கமிஷன், லாபம் போன்ற பல அம்சங்கள் சில்லறை விற்பனையில் நிரந்தரமாக இடம் பெறுவதால் மொத்தவிலை அடிப்படையில் கணக்கிடப்படும் விலைச்சரிவு நடைமுறையில் சாதாரண மனிதனுக்கு எட்டுவதில்லை.
இன்னொன்று பணவீக்கம் குறைந்தாலே விலைவாசியும் அதனுடன் குறையும் என்று மக்கள் எண்ணுகின்றனர். உண்மையில் பண வீக்கம் என்பது பொருள்களின் விலை எந்த விகிதத்தில் உயருகின்றது என்பதைக் காட்டுவதே ஆகும்.

எடுத்துக்காட்டாக பணவீக்கம் 10 சதவீதம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.  அப்படியென்றால் பொருள்களின் விலை சராசரி யாக 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்ற பொருள். அதுவே பணவீக்கம் 3 சதவீதமாக இருக்கும்போது விலை 3 சதவீத வேகத்தில் உயர்ந்துள்ளது என்று அர்த்தம்.  இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பணவீக்கம் குறையும்போது விலை உயரும், விகிதம் குறையுமே தவிர விலை குறையாது.
சில பொருள்களின் விலை பணவீக்க அளவை விட அதிகமாக உயருவதைப் பார்க்கிறோம்.  அதற்குக் காரணம், பணவீக்கம் கணக்கிடப்படும் போது நடைமுறை பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பொருள்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் பல ஆண்டுகளுக்கு முன் பட்டியலிடப்பட்ட குறிப்பிட்ட 435 பொருள் களின் விலைகள் மட்டும் கணக்கில் கொள்ளப் படுவதுதான். அதாவது குறிப்பிட்ட அந்தப் பொருள் பட்டியலில் இடம்பெற்றிருக்கவே இருக்காது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீத பங்களிப்பை வழங்கும் சேவைகளுக்கான விலைகளும் பணவீக்க மதிப்பீட்டில் அடங்குவதில்லை.  இதனால் மக்கள் அதிகமாகச் செலவிடும் மருத்துவக் கட்டணம், கல்விக் கட்டணம், வீட்டு வாடகை போன்றவை மிக அதிகமாக உயர்வது பணவீக்கப் புள்ளி விவரங் களில் எதிரொலிப்பதில்லை.

விலைவாசி உயர்வு மற்றவர்களை விட குறைந்த வருவாய்ப் பிரிவு மக்களை அதிகம் பாதிக்கிறது. பணவீக்க விகிதம் என்னதான் குறைந்து வந்தாலும் இவர்கள் வாங்கும் பொருள் களின் விலை மட்டும் வேகமாக உயருகின்றன.  இதற்குக் காரணம், பணவீக்கத்தை மதிப்பிடும் போது வெவ்வேறு வகையான பொருள்களுக்கு வெவ்வேறு வகையான வெயிட்டேஜ் கொடுக்கப்படுவதுதான். உதாரணமாக, ஒரு ஏழைத் தொழிலாளி தனது முழு வருமானத் தையும் உணவுப் பொருள் வாங்குவதற்குத்தான் பயன்படுத்துவார். ஆனால் இதுபோன்ற பொருள்களின் விலையில் ஏற்படும் மாற்ற மானது,  பணவீக்கத்தை குறைந்த அளவிலேயே பாதிக்கின்றது.  இதற்குக் காரணம் உணவுப் பொருள்களுக்கான வெயிட்டேஜ் 22 புள்ளிகள் மட்டுமே.  இதனால் பணவீக்கம் மிக வேகமாகக் குறைந்தாலும் ஏழைகளுக்கு எந்தப் பலனும் தெரிவதில்லை.

புதியமுறை
மத்திய அரசு பணவீக்க விகிதத்தைக் கணக்கிடும் முறையை மாற்றி அமைத்துள்ளது.  இதன்படி உணவுப் பொருள் மற்றும் எரி பொருள்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைப் பொருள்களின் மொத்த விலை அடிப்படையில், பணவீக்கத்தைக் கணக்கிடும் நடைமுறை இந்தியாவில் முதன்முறையாக அமல்படுத்தப் பட்டுள்ளது. அதாவது மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ள பொருள்களின் பட்டியலில் உற்பத்தி பொருள்கள் நீங்கலாக ஏனைய இரண்டு பிரிவு மட்டும் கணக்கில் கொள்ளப்படுகிறது.
இந்த மாற்றத்திற்கு முன்பு உணவுப் பொருள்களின் விலை மாற்றம் தனியாகத் தெரியாமல் பல்வேறு பொருள்களின் விலை ஏற்றத்தில் ஐக்கியமாகி இருந்தது.  இனி, உணவுப் பொருள்களின் விலை மாற்றம் தனியாக தெளிவாகத் தெரியும்.

பணவீக்க விகிதத்தை அறிவிக்கும் கால அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  வாரந்தோறும் அறிவிக்கப்பட்டு வந்த பணவீக்க விகிதம் 2009 அக்டோபர் மாதம் முதல் மாதம் ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.
உணவுப்பண்டங்கள் மற்றும் எரி பொருள் ஆகியவற்றை இணைத்து அவற்றின் பணவீக்க விகிதம் (முதல் இரண்டு பிரிவு பொருள்களை மட்டும் உள்ளடக்கியது) மொத்த விலை அடிப்படையில் வாரந்தோறும் அறிவிக்கப்படுகிறது.

கணக்கிடும் முறையில் உள்ள குறைபாடு என்னவென்றால், மக்கள் பொருள்களை வாங்குவது சில்லறை விலையில் இருக்க பணவீக்க விகிதம் இன்னமும் மொத்தவிலை அடிப்படையில்தான் கணக்கிடப்படுவதுதான். ஆகவேதான் பணவீக்க விகிதம் குறைந்துள்ள தாக அரசு அறிவித்தாலும் நடைமுறையில் மக்களால் அந்த விலைக்குறைப்பை உணர முடிவதில்லை.  உலகின் பெரும்பான்மையான நாடுகள் சில்லறை விலை அடிப்படையில் பணவீக்கத்தை கணக்கிடத் தொடங்கி விட்டன.  எனவே மொத்த விலையில் அல்லாமல் சில்லறை விலை அடிப்படையில் பணவீக்க விகிதம் கணக்கிடப்பட வேண்டும்.

பொருள்களை வகைப்படுத்துவதிலும், அவற்றுக்கு வழங்கப்படும் ‘வெயிட்டேஜ்’-லும் சீர்திருத்தம் தேவை. மேலும் மக்களின் மாறிவரும் உணவுப் பழக்கங்களைக் கருத்தில் கொண்டு தற்போது பட்டியலில் உள்ள உணவுப் பொருள்கள் ஆய்வு செய்யப்பட்டு இன்றைய நுகர்வு கலாச்சாரத்திற்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
பேரா. பி.கே. மனோகரன்

No comments: