Friday, May 28, 2010

பெரியார் பார்வையில் நபிகள் நாயகம்



முகமதுநபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை என்பதை ஒப்புக் கொள்ளமுடியாத நம் போன்றவர்களும் மற்றும் பல தேசத்தைச் சேர்ந்த சீர்திருத்த வாதிகளும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒப்புக்கொள்வதற்கும் மேற்கோள்களாக எடுத்துக் காட்டுவதற்கும் பல கருத்துகள் இருக்கின்றன.

Friday, May 14, 2010

பூமி வெப்பமயமாதல் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாகும்



கோடைக்காலத்தில் கடுமையான வெப்பத்தையும் குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியாகவும் உணர்கிறோம். இவைதான் நாம் அனுபவிக்கும் தட்பவெப்ப நிலைகள். ஓர் இடத்தின் தட்ப வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் அனுபவிக்கும் சராசரியான கால நிலையைக் குறிப்பது. மழை, சூரிய ஒளி, காற்று, ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை இவையே ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் காரணிகள்.

Friday, May 07, 2010

 மருத்துவரை காணும் முன்.....


"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பார்கள். ஆனால் ஆரோக்கியமாக உள்ள நேரம் உடல் நலனைப் பற்றி நாம் அதிகம் அக்கறை கொள்வதில்லை. உடல் நலத்தை கெடுத்துக் கூட பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் பின்னாளில் எல்லாவற்றையும் ஆஸ்பத்திரிகளுக்கு வாரிக் கொடுத்து ஓட்டாண்டிகளாகிப் போவதுண்டு. கண்ணை விற்று சித்திரம் வாங்ககூடாது. ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அப்புறம் தான் மற்ற எல்லாம்.

ஹோமியோபதி
உலகிலே மனிதனுக்கோ மற்ற உயிரினங்களுக்கோ ஏற்படுகின்ற நோயை போக்குவதற்கு, பல மருத்துவ முறைகள் உள்ளன. உலகில் ஆயிரம் மருத்துவ முறைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் 400 மருத்துவ முறைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனை எல்லாம் தொகுத்து 32 மருத்துவ முறைகளே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.