Wednesday, March 31, 2010
Tuesday, March 23, 2010
மரம் வளர்த்தார்; குரோர்பதி ஆனார்!
ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது?
"நீயெல்லாம் ஆடு மேய்க்கத் தாண்டா லாயக்கு' என்று யாராவது உங்களைப் பார்த்து திட்டினால் கோபபபடாதீர்கள். சந்தோஷப்படுங்கள். ஏதோ ஒரு படிப்பைப் படித்து விட்டு நான்காயிரம், ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆளாய் அலைவதை விட, வீட்டிலிருந்தபடியே உடம்பு நோகாமல் ஆடு வளர்த்து அதே பணத்தைச் சம்பாதிக்கலாம். இதுக்கு நான் கியாரண்டி'' - நம்பிக்கையோடு உறுதி தருகிறார் தாமோதரன்.
உணவில் பூண்டு சேர்க்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? இல்லையெனில், இனியாவது சேருங்கள்; பூண்டில் இல்லாத சத்துக்களே இல்லை. உங்கள் குடும்ப டாக்டர் பில் குறையணும்; இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், பூண்டை விட சிறந்தது வேறில்லை.
Labels:
மருத்துவம்
Monday, March 22, 2010
பொதுவாக மனிதன் - தன்னிடம் இருக்கின்ற ஐந்து புலன்களின் வழியாகத் தான் அறிவைப் பெறுகின்றான். வளர்த்துக் கொள்கின்றான். ஆனால் புலன் உணர்வுகளைக் கொண்டு "அறிவியல்" அறிவைத் தான் வளர்த்துக் கொள்ள இயலுமே தவிர புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட "அறிவைப்" பெற்றுக் கொண்டிட இயலாது.
புலன்கள் வழியே நாம் பெறுகின்ற அந்த "அறிவியல் அறிவு" கூட எந்த அளவுக்கு உண்மையானவை? நம்பத் தகுந்தவை தெரியுமா? - இதோ கேள்வி-பதில்:
"மனிதா! நீ எப்படி அறிவைப் பெறுகிறாய்?"
"என் கண்களால் நான் பார்க்கிறேன். அதனால் அறிந்து கொள்கிறேன்."
"உன் கண்களால் பார்த்து அறிந்து கொள்ளும் விஷயத்தில் உனக்கு சந்தேகமே கிடையாதே?"
" என் கண்களால் நானே பார்ப்பதை நான் ஏன் சந்தேகிக்க வேண்டும்?"
"அப்படியானால் 'கானல் நீருக்கு' நீ என்ன விளக்கம் சொல்கிறாய்? கண்ணுக்கு எதிரே இல்லாத நீரை உன் கண்கள் எப்படிக் காட்டியது?"
நண்பனே! உண்மையில் நாம் நமது கண்களால் ஒன்றைப் பார்த்து அறிந்து கொள்வது எப்படி தெரியுமா? நம் கண்களின் எதிரே உள்ள ஒரு பொருளின் பிம்பம் நமது விழித் திரையில் (retina) தலை கீழாக விழுகிறது. அந்த பிம்பம் குறித்து மூளைக்குத் தகவல் அனுப்பப் படுகிறது. மூளை ஒன்றைப் புரிந்து கொள்கிறது. மூளை புரிந்து கொண்டது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். கண்களால் நாம் பெறும் அறிவின் நம்பகத் தன்மை இவ்வளவு தான்! மற்ற புலன்கள் வழி நாம் பெறுகின்ற தகவல்களின் நிலையும் அதே தான்! அதனால் தான் சொன்னார்களோ - "கண்ணால் பார்ப்பதுவும் பொய் - காதால் கேட்பதுவும் பொய்" - என்று!
விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்களே ஆய்வுக் கூடங்களில். அந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை தானா? அவற்றில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை என்றால் - அதுவும் கேள்விக்குறி தான்! பின் ஏன் நேற்று சொன்ன ஒரு அறிவியல் கறுத்தை இன்று மாற்றிக் கொள்கிறார்கள்?
ஒளி நேர்கோட்டில் பரவுகிறது என்ற கருத்து இன்று எங்கே போயிற்று?
அணுவைப் பிளக்க முடியாது என்று அன்று டால்ட்டன் சொன்ன கோட்பாடு இன்று என்ன ஆனது?
அப்படியிருக்கும் போது இன்று சொல்லப்படுகின்ற அறிவியல் கோட்பாடுகளின் நாளைய கதி என்ன? அவை எதிர்காலத்தில் மாற்றப் படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? மாற்றங்களுக்கு ஆளாகும் அத்துனை அறிவியல் கோட்பாடுகளையும் வெறும் ஊகங்கள் என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது?
விஞ்ஞானக் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்து பாப்பர் என்ற விஞ்ஞானி என்ன கூறுகிறார் தெடியுமா?
"Theories are often bold conjectures!" - அதாவது அறிவியல் கோட்பாடுகள் பெரும்பாலும் துணிச்சலான கற்பனைகளே! அறிவியல் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்துக் கவலைப் படாமல் - இயன்ற அளவுக்கு அதிகம் அதிகமான கோட்பாடுகளை அறிவியல் உலகுக்கு வழங்கிட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் டாவிஸ் என்ற விஞ்ஞானி.
"The world of science should be like a classical free enterprise market place, with theories as commodities. When there is a demand for theories (of any sort) it is to the consumer's advantage to allow the largest possible supply...." "விஞ்ஞான உலகம் என்பது சுதந்திரமான ஒரு வியாபரச் சந்தையைப் போல! இந்த சந்தையில் விற்கப் படும் பொருள்: விஞ்ஞானக் கோட்பாடுகள் தாம். ஒரு குறிப்பிட்ட வகைக் கோட்பாடுகளுக்கு "கிராக்கி" ஏற்படும்போது, சந்தைக்கு - எந்த அளவுக்கு இயலுமோ - அந்த அளவுக்கு வகை வகையான கோட்பாடுகளை அனுமதிப்பது - அவைகளைப் பயன் படுத்துபவர்களுக்கு வசதி தானே! நாம் கேட்பது என்னவென்றால் - அறிவியல் கோட்பாடுகளெல்லாம் "வியாபாரப் பொருட்களா"? கிராக்கி இருக்கிறது என்றால் பொய்யான கோட்பாடுகளையும் "விற்பனைக்குக் கொண்டு வந்து விடுவீர்களா?
ஆம்! இது தான் இன்றைய அறிவியல் உலகம்! இங்கே உண்மையும் பொய்யும் கலந்தே விற்பனை செய்யப் படுகின்றன! விழித்துக் கொள்ள வேண்டியது - நம்மைப் போன்ற "வாடிக்கையாளர்கள்" தான்!
இது இப்படி இருக்க - என்னைப் படைத்தது யார்? நான் படைக்கப் பட்டதன் நோக்கம் என்ன? நமது துவக்கமும் முடிவும் என்ன? - என்பன போன்ற வாழ்வியல் கேள்விகளுக்கான விடைகளை இயற்பியல் ஆய்வுக் கூடத்திலோ வேதியியல் ஆய்வுக் கூடத்திலோ ஆய்வு செய்து கண்டு பிடித்து விட இயலுமா?
எனவே தான் சொல்கிறோம். அறிவு இரண்டு வகைப் படும்.
ஒன்று - புலன்களின் மூலமாகப் பெறப் படும் அறிவு.
இரண்டு - புலன்களுக்கு அப்பாற்பட்டவை பற்றிய அறிவு,
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட அறிவு என்பது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவைச் சார்ந்தது.
என்வே - வாழ்க்கை சம்பந்தமான தெளிவான அறிவை -
ஆளுக்கொரு கருத்தினை மனம் போன போக்கில் சொல்லிக் கொண்டிருக்கும் தத்துவ ஞானிகளின் சிந்தனைகள் மூலமாகவோ
ஐம்புலன்களை மட்டுமே நம்பி செயல் படுகின்ற அறிவியலாளர்கள் மூலமாகவோ
பெற்றுக் கொண்டு விட முடியாது!
அப்படியானால் - வாழ்க்கை சம்பந்தப்பட்ட அறிவை, அதாவ்து புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவை நாம் பெறுவது எங்கனம்?
இறைவனை நம்ப மறுக்கின்ற நாத்திகர்களுக்கு வாழ்க்கை என்பதே ஒரு விபத்துத் தான். ஆனால் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஏற்பவர்களுக்கு - புலன் உணர்வுகளுக்கு உட்பட்ட மற்றும் உட்படாத எல்லா அறிவுக்கும் ஆற்றலுக்கும் சொந்தக்காரன் அந்த இறைவனே என்பதைப் புரிந்து கொள்வதில் எந்த வித சிரமமும் இருக்கப் போவதில்லை. ஆம்! எல்லா அறிவுக்கும் சொந்தக் காரனான அந்த ஆண்டவனிடத்தில் இருந்து தான் நாம் வாழ்க்கைக்கான மிகச் சரியான் அறிவைப் பெற்றும் கொள்ள முடியம்?
நன்றி CounselorMansoor
அணுப்பிளவு (Nuclear Fission)
இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளை உடைத்துக் கொண்டேபோனாலும் கடைசியில் மிஞ்சிருப்பது அணுக்கள். நம்ம கதை இங்கே அணுக்கள் பற்றி இல்லை. உலகில் உள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவையே. சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. இந்த உலகம் எப்பொழுது உருவானது? அப்படி ஒரு காலத்தில் உருவானது என்றால், உருவாவதற்கு முன் என்ன இருந்தது? வெற்றிடம்? அப்படியானால் அந்த வெற்றிடம் உருவாவதற்கு முன் என்ன இருந்தது?!!!
அணுக்கள் தாம் இந்த உலகின் மிகச் சிறிய பொருள். அப்போ அணுக்கள் உள்ளே இருப்பவை? கண்ணால் பார்க்க இயலாது. ஒரு குண்டூசி தலையில் 100 பில்லியன் பில்லியன் அணுக்களை உட்கார்த்தி வைக்க முடியும். ஒவ்வொரு அணுவும் மூன்று அடிப்படை பொருட்களால் உருவாக்கப்பட்டன.
1) இலத்திரன்கள் (எலெக்ட்ரான்கள்) – இவை -ve சார்ஜ் உள்ளவை.
2) புரோத்தன்கள் (ப்ரோட்டான்ஸ்) – இவை +ve சார்ஜ் உள்ளவை. இவை எலெக்ட்ரான்களை விட 1836 மடங்கு எடை கொண்டது.
3) நியூட்ரான்ஸ் – இவை எந்த சார்ஜும் இல்லாத, நடுநிலை மின்னேற்றம்.இவை எலெக்ட்ரான்களை விட 1839 மடங்கு எடை கொண்டது.
ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும் சேர்ந்து நியூக்லியான்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இது உட்கரு. ஒவ்வொரு அணுவின் உட்கருவை ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும் சேர்ந்து உருவாக்குகின்றன. அதாவது, உட்கரு என்பது ப்ரோட்டான்கள் + நியூட்ரான்கள். இவ்விரண்டையும் சுற்றி, ஒரு சிமென்ட் கலவை அல்லது கோ(யி)ந்து போல, ஒரு கலவை (binding force) இருப்பதால் அவை உட்கருவை அப்படியே வைத்திருக்க உதவுகிறது. ஒரு அணுவை சுற்றிக் இருக்கும் எலெக்ட்ரான்களும் (-ve), உட்கருவில் இருக்கும் ப்ரோட்டான்களும் (+ve) ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்கிறது.


உட்கருவின் ஒரு பகுதியாக இருக்கும் நியூட்ரான்ஸ் சும்மா ‘தேமே’ என்று தான் இருக்கும். ஆனால், அது தான் இங்கே மேட்டரே. ஆக, இது ஒரு அணுவின் கட்டமைப்பு. இதைப் போல 92+ விதமான அணுக்கள் இருப்பதாக கண்டுபிடித்து பட்டியல் இடப்பட்டிருக்கிறது. அவை அடிப்படைத் தனிமங்கள். அவற்றை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு எண் வைத்து குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் உட்கருவில் உள்ள ப்ரோட்டான்களின் (+ve) எண்ணிக்கை தான் அது. இதை தான் ‘அணு எண்’ – Atomic Number – என்று அழைக்கின்றனர். பெரும்பாலும் ஒரு உட்கருவில் உள்ள இலத்திரன்களின் எண்ணிக்கை இந்த அணு எண்ணுடன் ஒத்துப் போகும். உதா, ஹைட்ரஜன் – 1, லித்தியம் – 2, ஆக்ஸிஜன் – 8, தங்கம் – 79, யுரேணியம் – 92. இவற்றை இங்கு காணலாம். மற்றபடி இவற்றை பற்றி விலாவரியாக பேச இங்கு தேவை இல்லை (அதாவது, எனக்கும் அவ்வளவு தான் தெரியும்னு அர்த்தம், புரிஞ்சுக்கோங்க).
உதா,

அடுத்து, ஒவ்வொரு அணு குடும்பத்திலும் இன்னபிற உருப்பினர்களும் உண்டு. அவற்றை isotopes என்று அழைப்பர். இந்த குடும்ப அங்கத்தினர்கள் யாவரும் ஒரே எண்ணிக்கை புரோத்தன்களை வைத்திருப்பர். ஆனால், அவர்களுக்குள் உள்ள வித்தியாசம் அதன் நியூட்ரான்களின் எண்ணிக்கையே.
உதா, யுரேணியம்-ன் புரோத்தன்களின் எண்ணிக்கை என்னவோ 92 தான். ஆனால், அவற்றின் நியூட்ரான்களின் எண்ணிக்கை மாறுபடும். 142, 143, 146 என. புரோத்தன்கள் + நியூட்ரான்கள் = அணு எடை (Atomic Mass). அதனால், நம்மிடம் உள்ள யுரேணியத்தின் வகைகள் U234, U235, U238. இங்கு 234 என்பது 92 + 142. இவற்றில் பல தனிமங்கள் தங்கள் நிலையிலேயே நிலையாக இருக்கும். ஆனால் ‘சில’ தனிமங்கள் எப்பொழுதும் ஏதாவது வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அவைகள் கதிரியக்கம் (radioactive) என்பர். உதாரணமாக, ரேடியம் (Ra88) தன்னில் இருந்து, தன் நியூட்ரான்கள் மற்றும் புரோத்தன்கள் உடன், சக்தி வாய்ந்த கதிர்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். இரவில் கூட ஒளிருமே, கடைகளில் ஸ்டிக்கர்க்ளாக விற்ப்பார்கள். இது எந்த அளவு active-ஆக இருக்கும் என்றால், தன் சொந்த உட்கருவின் கட்டமைப்பையே மாற்றும் வரை active ஆக இருக்கும் (“சொந்த செலவுல சூன்யம் வைத்துக் கொள்வது”?). இப்படி தன் கட்டமைப்பே மாறும் பொழுது அது தன் குடும்பத்தையே மாற்றுகிறது.
உதா, ரேடியம் (Ra88) தன்னுள் இருந்த சக்தியை எல்லாம் வெளியேற்றி வெளியேற்றி ரேடான் (Rn86) ஆக மாறி பின் காரீயம், Lead,(Pb82) ஆக மாறுகிறது. அது தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொள்ளும் வரை இப்படி நிலை மாறிக் கொண்டிருக்கும். இதற்குப் பெயர் இயற்கை உருமாற்றம் (Natural Transmutation), இது இயற்கையாக நடக்கும் பட்சத்தில். இப்படி ஒரு அணு தன் நிலையை தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் பொழுது, ஏன் மனிதன் தன்னால் ஒரு அணுவின் நிலையை மாற்ற முடியாது என்று சிந்தித்ததன் விளைவு தான் செயற்கையாக உருமாற்றம் செய்வது.
இதன் படி, ஒரு கதிரியக்க உட்கருவை, (உதா, யுரேனியும், ரேடியம்), மிண்காந்த சக்தியைக் கொண்டு வெளிப்படுத்தப்படும் ஆல்ஃபா கதிர்களில் உள்ள உட்கருவில் 2 புரோத்தன்கள் மற்றும் 2 நியூட்ரான்கள் இருக்கும். 2 புரோத்தன்கள் + 2 நியூட்ரான்கள் = ஹீலியம் (He2). இந்த முறைக்கு Alpha decay என்று பெயர். இதுவும் ஒரு தனிமம் தான். இது வேகமாக நகரக் கூடியது, 1 வினாடியில் 2 கோடி மீட்டர்கள். இவை காற்றில் சில தூரங்கள் (இன்ச்-ல்) மட்டுமே பயணப்படும். அவற்றை சாதாரண காகிதங்களாலேயே தடுக்க முடியும். இந்த முறையில் 2 அணுக்கள் இழந்து அது வேறு ஒரு பொருளாக மாற்றம் பெருகிறது. உதா, யுரேணியம் (U92) 2 அணுக்களை இழந்து தோரியமாக (Th92) மாறுகிறது. சுருக்கமாக சொன்னால், நீங்கள் கடையில் வாங்கும் ரேடியமானது வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டே இருக்கும். அந்த வெளிச்சம் தான் ஹீலியம் (He2). ஹீலியம் காலியாகிக்கொண்டே இருப்பதால் காலப்போக்கில், அந்த ரேடியம் (Ra88) ரேடான்-ஆக (Rn86) மாறுகிறது. ஆல்ஃபா கதிர்கள் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட Nuclear Radiation.
இப்படி ஆல்ஃபா கதிர்களை ஒரு, உதா, நைட்ரஜன் மீது பாய்ச்சும் பொழுது, ஆல்ஃபா கதிர்களில் உள்ள ஒரு புரோத்தன், நைட்ரஜன் உட்கருவால் ஈர்க்கப்பட்டு அது ஆக்சிஜனாக மாறியது. இதற்குப் பெயர் செயற்கை உருமாற்றம் (Artificial Transmutation). மனிதன் ஒரு அணுவையே மாற்றுகிறான். இந்த ஆராய்ச்சிகள் அதன் பின் வந்த விஞ்ஞானிகளால் வலுப்பெற்றது.


பின் 1939-ல் சில விஞ்ஞானிகளின் யுரேணியம் உருமாற்ற சோதனையின் பொழுது ஒரு நியூட்ரானை யுரேணியத்தின் உட்கருவின் மீது பாய்ச்சினார்கள். கவனிக்க, யுரேணியம் அதிக எடை கொண்டது. அப்பொழுது கிடைத்த விளைவு? அணுப்பிளவு (Nuclear Fission). ஒரு சிறு மாற்றத்திற்கு பதில், அணுக்களே இரண்டாக உடைந்தது. இது உலகை மற்றத்தக்க (அல்லது உலகின் வரைபடத்தை மாற்றத்தக்க) கண்டுபிடிப்பு. என்ன நடந்தது? அங்கே நடந்தது விஞ்ஞானத்தின் இரட்டிப்பு அதிசயம். விஞ்ஞானிகள் எதிர்ப்பார்க்காத அதிசயம்.
ஒன்று யுரேணியத்தின் உட்கருவை (கவனிக்க ப்ரோட்டான்கள் + நியூட்ரான்கள் கொண்டது) சேர்க்க வைத்திருக்கும் கோந்து (binding force) என்னும் கலவை பற்றியது. யுரேணியம் யுரேணியமாக இருந்த பொழுது இருந்த கலவையின் எடை, அவை இரண்டாக பிரிந்த அணுக்களில் இருந்த கலவையின் மொத்த எடையை விட அதிகமாக இருந்தது (அல்லது அதுவே தேவையானதாக இருந்தது). பிரிந்த பின் அந்த கலவையில் ஒரு பகுதி மட்டும் தனியே வந்து…வெடித்தது. ஏன் bold-ல் வெடித்தது? அது பெரும் சக்தியாக வெடித்தது. வெடித்து ஐண்ஸ்டீனின் E = MC2 என்னும் ஃபார்முலா படி எடையும் சக்தியும் ஒன்று என்று நிரூபித்தது. கீழே உள்ள படத்தினைப் பார்க்கவும்.
| நெட்டில் சுட்டது: அணுப்பிளவைப் (Nuclear Fission) பற்றி பலருக்கும் தெரியும். ஹிரோஷிமா, நகசாகி நகரங்களின் பேரழிவிற்கும் அணுமின் நிலையங்களில் ஆக்கபூர்வ சக்தி உற்பத்திக்கும் அணுப்பிளவுதான் அடிப்படை. மாபெரும் அணுவின் பொருண்மைக்கும் (m0) அதைப் பிளக்கும்பொழுது உருவாகும் சிறு அணுக்களின் கூடுதல் பொருண்மைக்கும் (m1 + m2) இடையே உள்ள சக்தியின் வேறுபாட்டுக்கு நேர்விகிததில் சக்தி தோன்றுகிறது. இதையே ஐன்ஸ்டைனின் E = mc2 என்ற சமன்பாடு கணக்கிடுகிறது. அணுப்பிளவில் சக்தியுடன் கூட பக்கவிளைவாகக் கதிரியக்கம், வெப்பக்கதிர்வீச்சு போன்றவையும் நிகழ்கின்றன. இவற்றினால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் பக்கவிளைவு அதிகம். |
விளைவு அல்ல!!! ஒரு தொடர் விளைவு (Chain Reaction), நம்ம பாலபாரதி அடுத்தடுத்து ‘தம்’ போடுவது போல, இரண்டே இரண்டு வினாடிகளில் மில்லியன் பில்லியன் பில்லியன் அணுக்கள் வெடிக்கின்றன. அதன் சக்தி எப்படிப்பட்டது என்றால், ஒரு பெரிய மைதானம் நிறைய டைனமைட்டை வெடிக்க வைத்தால் கிடைக்கக் கூடிய சக்தி, இந்த ஒரு சிறிய பந்து அளவிலான யுரேணியத்தை பிளப்பதால் உண்டாகும். எந்த ஒரு அதிசய கண்டுபிடிப்பும், ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படுவதை விட, தற்காப்புக்கு பயன்படுத்தப் போய், பின் சமயம் கிடைக்கும் பொழுது அந்த நாட்டை அழிக்க பயன்படுத்திவிட்டு, அதன் பின் பிராயசித்தத்துக்காக அழிக்கப்பட்ட தேசத்தின் ராணுவ தேவைகளை கவனித்துக் கொள்வது. பாதிக்கப்பட்ட நாடும் சமாதானம் பேசிக் கொண்டு உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை தயார் செய்வது (கேட்டால் அது business).
சரி! அணு ஆயுதம் செய்ய ஒரு பந்து அளவிலான யுரேணியத்திற்கு என்ன செய்வது? மண்ணில் அதிகமாக கிடைக்கக் கூடிய யுரேணியத்தின் isotopes-களில் ஒன்றான U238-ஐ மலையளவு பிளவித்து செய்து U235-ஆக மாற்றி முதல் அணுகுண்டை செய்தார்கள். இதற்கு ஏராளமான மனித உழைப்பு தேவைப்பட்டது (அடுத்தவனை அழிக்கத்தான் ஓவர் டைமில் ஒர்க் பன்னுவோமே!!!). இங்கே கவனிக்க வேண்டியது, U235 மட்டுமே சங்கிலித் தொடரை அனுமதிக்கும், U238 அல்ல. ஆனால், புளூட்டோனியம் (Pu94) சங்கிலித் தொடரை அனுமதிக்கும்.
ஆக, அணுகுண்டு எப்படி வெடிக்கிறது என்று (மேலோட்டமாக) பார்த்தோம்.
(சுற்றிலும் சீல் செய்யப்பட்ட) ரியாக்ட்டர்களின் உதவியுடன், செயற்கையான(க) புளூட்டோனியம் தயாரிக்க மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது. ரியாக்ட்டர்களில் இயற்கையான யுரேணியங்கள் (U235 மற்றும் U238) கம்பி வடிவில் வைக்கப்படுகின்றது. அந்த ரியாக்ட்டர்களில் உள்ள கிராஃப்பைட், U235 பிளக்கப்படும் பொழுது அதி வேகத்தில் வெளியாகும் சில நியூட்ரான்களின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. அவற்றில் சில (கட்டுப்படுத்தப்படாத) நியூட்ரான்கள் மற்ற U235-க்களை பிளக்கும். அதனால், இது அந்த சங்கிலித் தொடரை கட்டுக்குள் வைத்திருந்து தொடர முடிகிறது.
கட்டுப்படுத்தப்பட்ட நியூட்ரான்கள் U238-ஐ பிளக்க ஆரம்பிக்கிறது. U238 சங்கிலித் தொடரை அனுமதிப்பதில்லை. ஆனால் U235-ல் இருந்து வரும் ஒரு நியூட்ராணை எடுத்துக் கொண்டு U238-ஆனது முதலின் நெப்ட்யூனியம்-ஆக (Np93) மாறி, பின் அது புளூட்டோனியமாக (Pu94) மாறுகிறது. புளூட்டோனியம் (Pu94) சங்கிலித் தொடரை அனுமதிக்கும். அதனால், புளூட்டோனியம் உபயோகித்து அணுகுண்டு தயாரிக்க முடிந்தது. இங்கே, ரியாக்ட்டரே ஒரு அணுவிசை மையமாக இருக்க முடிகிறது. புளூட்டோனியம் கிடைப்பதுடன், அதன் விளைவாக மிக பயங்கரமான அளவில் வெப்பமும் வெளிப்படுவது நியூட்டனின் மூன்றாவது விதி. அந்த வெப்பத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அதை உபயோகிக்க முடிவதால் பல வழிகளில் உபயோகமாகிறது. அதன் ஒரு முக்கியமான உபயோகம் மின்சாரம்.
Tuesday, March 09, 2010
தகவல் பெறும் உரிமைச்சட்டம் - விளக்க புத்தகம் டவுன்லோடு செய்ய
உலகில் மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் எத்தனையோ இருக்கின்றன. இந்த உலகில் கடந்த காலத்தில் இருந்தவை, நிகழ்காலத்தில் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிதாய்த் தோன்றிய தோற்றங்கள் என எண்ணிலடங்காத பொருள்கள், உயிர்கள் எத்தனையோ இருக்கின்றன. இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்பட்டாலும், அவைகளை எல்லாம் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ள மனிதனின் வாழ்க்கை போதுமானதாக இருக்காது. மனிதன் அறிந்து கொள்ள எத்தனையோ தகவல்கள் இந்த உலகில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதுப்புதுத் தகவல்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் எல்லாத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியாது. மனிதனுடைய அறிவுத் தேடலுக்குத் தேவையான சில தகவல்களைத் தேடி அதைத் தெரிந்தவர்களிடம் செல்கிறோம். சில தகவல்களுக்காக நூலகங்களுக்குச் செல்கிறோம். சில தகவல்களுக்காக என்சைக்ளோபீடியாவைத் தேடுகிறோம். தற்போது இணையத்தின் வழியாகவும் தேடுகிறோம். இந்தத் தேடுதலுக்கு விடை கிடைத்து விடுகிறது.ஆனால் அரசுப் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்பினால் மட்டும் நமக்கு எந்தத் தகவல்களுமே கிடைப்பதில்லை. ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவன் விரும்பும் தகவல் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் எழுந்த போது அதற்கு அரசின் சில சட்டதிட்டங்கள் இடையூறாக இருந்தது. இது மாற்றப்பட வேண்டும். அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005.
இந்த சட்டம் குறித்த பயனுள்ள தமிழ் விளக்க புத்தகத்தை (PDF வடிவில்) தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
என்னையே ஏன் சோதிக்கிறாய்?
அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற விம்பில்டன் ஆட்டக்காரர் ஆர்தர் அஷெ (Arthur Ashe) 1983 ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சையின் போது பெற்ற ரத்தம் எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் அவர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டு மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த போது அவருடைய ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்தனர். உலகெங்குமிருந்து அவர் ரசிகர்கள் கடிதங்கள் மூலமாகத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர். அதில் ஒரு ரசிகர் மிகுந்த வருத்தத்துடன் எழுதியிருந்தார். “கடவுள் ஏன் உங்களை இந்தக் கொடிய நோயிற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு விளங்கவில்லை”
ஆர்தர் அஷே பதில் எழுதினார். “உலகமெங்கும் ஐந்து கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள். ஐம்பது லட்சம் குழந்தைகள் டென்னிஸை முறைப்படி ஆடக் கற்கிறார்கள். ஐந்து லட்சம் பேர் திறமை பெறுகிறார்கள். ஐம்பதாயிரம் பேர் களத்திற்கு வருகிறார்கள். ஐந்தாயிரம் பேர் க்ராண்ட் ஸ்லாம் அளவை எட்டுகிறார்கள். ஐம்பது பேர் விம்பில்டன் வரை வருகிறார்கள். நான்கு பேர் அரையிறுதி ஆட்டம் வரையும் இருவர் இறுதி ஆட்டம் வரையும் வருகிறார்கள். அதுவரை வந்து நான் அதிலும் வென்று விம்பில்டன் கோப்பையை என் கையில் ஏந்தி நின்ற போது “கடவுளே ஏன் இதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய்” என்று நான் கடவுளைக் கேட்கவில்லை. இன்று இந்தக் கொடிய நோயின் வலியில் துடிக்கும் இந்த நேரத்தில் “கடவுளே ஏன் இதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய்” என்று நான் கடவுளைக் கேட்பது நியாயமாகாது”
டென்னிஸ் விளையாட்டில் மட்டுமல்ல வாழ்க்கை விளையாட்டிலும் அவர் அடைந்திருந்த தேர்ச்சி நம்மை வியக்க வைக்கிறதல்லவா? இந்த மனப்பக்குவம் எத்தனை பேருக்கு வரும்?
இதே கருத்தை கம்ப இராமாயணத்திலும் ஓரிடத்தில் இராமன் வாயால் நாம் கேட்கிறோம். காட்டிற்குச் செல்லும் இராமனுடன் காடு வரை வந்த சுமந்திரன் என்ற அமைச்சர் இராமனின் அந்த நிலைக்கு வருத்தப்படும் போது இராமன் சொல்கிறான். “இன்பம் வந்தால் இனிமையானது என்னும் போது துன்பம் வந்தால் மட்டும் அதைத் துறந்து விட முடியுமா?”
(இன்பம் வந்துறும் எனில் இனியது ஆயிடைத்
துன்பம் வந்துறும் எனில் துறக்கல் ஆகுமோ?)
இன்பமும் துன்பமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நாணயத்தை ஏற்றுக் கொள்பவன் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைப் போலவே வாழ்க்கையிலும் இன்பத்தை மட்டுமே வேண்டுதலும் நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராத ஆசை.
உலகிற்கு வரும் போது எதையும் நாம் எடுத்து வரவில்லை. பெற்றதெல்லாம் இங்கிருந்தே பெறப்பட்டது. உலகத்தை விட்டுச் செல்லும் போது அவை அனைத்தையும் விட்டே செல்ல வேண்டி இருக்கிறது. சில சமயம் நாம் இங்கு இருக்கும் போதே சிலவற்றை இழக்க நேரிடுகிறது. விதி பலவந்தமாய் நம்மிடம் இருந்து சிலவற்றைப் பறித்துக் கொள்கிறது. கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் சொல்வது போல “இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லை என்றால் அவன் விடுவானா?”
ஆர்தர் அஷெ கூறுவது போல நமக்கு நன்மைகள் வந்து குவிகிற போது யாரும் “எனக்கு மட்டும் இத்தனை தந்தாயே ஏன்” என்று கேட்பதில்லை. பெற்ற நன்மைகளுக்கு நாம் நன்றி கூடத் தெரிவிப்பதில்லை. நன்மைகளைப் பெற்றது நமது சாமர்த்தியத்தால் என்று பெருமைப்படுகிறோம். அப்படி நன்மைகளைப் பெறுவது இயல்பே என்பது போல் நடந்து கொள்கிறோம். ஆனால் தீமைகள் நம் வாழ்க்கையில் நடந்து விட்டாலோ பழி போட ஆட்களைத் தேடுகிறோம். கடவுளிடம் “என்னையே ஏன் சோதிக்கிறாய்?” என்று கேட்கிறோம். ஏதோ உலகில் கஷ்டப்படும் ஒரே மனிதர் நாம் தான் என்பது போல் நடந்து கொள்கிறோம்.
ஆர்தர் அஷெ போல் கடுமையான சூழ்நிலைகளிலும் உண்மையை உணர்ந்து தெளிகிற மனப்பக்குவம் பெறுவது அவ்வளவு சுலபமல்ல. என்றாலும் மாற்ற முடியாத சூழ்நிலைகளை ஏற்றுக் கொள்ளும் போது அவற்றின் கடுமைகளை நாம் மிகவும் குறைத்துக் கொள்கிறோம். இனி என்ன செய்யலாம் என்று ஆக்க பூர்வமாக சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.
அந்த மனமாற்றமும் பக்குவமும் அடைவது ஒரு நாளில் அடையக்கூடியது அல்ல. முதலில் மாற்ற முடியாத சிறிய அசௌகரியங்களை முகம் சுளிக்காமலும், முணுமுணுக்காமலும் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். இந்த சிறிய அசௌகரியங்களால் குடிமுழுகி விடப் போவதில்லை என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அந்த அசௌகரியங்களை உங்களுக்கு சவாலாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படி நினைத்துக் கொள்ளும் போது பொறுத்துக் கொள்ளுதல் வெற்றி என்று ஆகிவிடுவதால் பொறுத்துக் கொள்ளுதல் எளிதாகிறது. அப்படியே படிப்படியாக உங்கள் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நல்லவைகளையே பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பே என்றாலும் தீயவைகளும் வரக்கூடும் என்பதை உணர்ந்திருங்கள். உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் இது இயற்கையான விதி தான். இதற்கு நீங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். வந்ததை ஏற்றுக் கொண்டு இதை எப்படிக் குறைக்கலாம், அல்லது நீக்கலாம் என்று சிந்தித்து செயல்படுங்கள். அது நீக்கவோ, குறைக்கவோ முடியாததாக இருக்குமானாலும் அந்த விதியை ஏற்றுக் கொள்ளுங்கள். பெற்றிருக்கும் எத்தனையோ நன்மைகளை எண்ணிப் பாருங்கள். அத்தனை நன்மைகளுக்கு இடையில் இது போன்ற ஓரிரு தவிர்க்க முடியாத தீமைகள் வருவது இயல்பே என்று சமாதானமடையுங்கள்.
இது போன்ற சிந்தனைகள் பலப்படும் போது, உண்மைகள் உணரப்படும் போது, உங்கள் மன அமைதி ஒருபோதும் குறைவதில்லை.
-என்.கணேசன்
உயிர் காக்கும் பழரசம்
செறிவூட்டப்பட்ட பழரசம் )
மொரிண்டா சிற்றிப்போலியா என்ற பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட பழரசம் தான் இந்த நோனி , நம்ம ஊர்ல நுணா காய்னு சொல்வோம் ,
நோனி மருந்து அல்ல , மருந்துக்கும் மாற்றம் அல்ல , ஆனால் எந்த மருந்தானாலும் அதன் வீரியத்தையும் செயல் திறனையும் அதிகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவு .நோனி ஒரு அதிசியமான செல் உணவு , நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் வளர்ச்சி அடைய செய்கிறது , நமது செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஆரோக்யமாக இருக்கின்றன .அப்போது உடல் இயக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது .
ஏன் நமக்கு நோனி தேவை ?
ரசாயன உரங்களால் உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகள்
சத்தற்ற உணவு வகைகளால் உண்டாகும் நோய்கள்
மன அழுத்தம் , உடல் பருமன்
வயதாகும் நம் உடல் தன்மை
இவை அனைத்தையும் சரி செய்து உடலை சிறந்த ஆரோகியமான உடலாக வைத்து இருக்க நமக்கு ப்ரோக்செரோனின் தேவைபடுகிறது , அது நோனி அருந்துவது மூலமாக கிடக்கிறது . நோனி ப்ரோக்செரோனின் சத்தை அதிகபடுத்தி நமது உணவில் இருந்து ப்ரோட்டின் சத்து முழுவதையும் உடலில் சேர்க்க உதவுகிறது
நோனி பற்றி இன்னும் சில குறிப்புகள்
முற்றிலும் மூலிகை யால் ஆனது
நஞ்சு இல்லா சாகுபடி மூலம் நோனி வளர்கபடுகிறது
நோனி ஒரு சைவ பானம்
நோனியில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது ?
ஆண்டி ஆக்சிதேன்ஸ் , அமினோ அமிலங்கள் , ஆள்க்ளய்ட்ஸ் முதலியன மற்றும் வைட்டமின்கள் A,C,E,B, கால்சியம் , இரும்புசத்து , சிங்கு , தாமிர சத்து ,மக்னிசியம் , பாஸ்பரஸ் ,குரோமியம் , மாலிப்டினம் , நியாசின் , போலிக் அமிலம் , பாண்டோதினிக் அமிலம் , மாங்கனீசு , கார்போஹட்ரோட்ஸ் மற்றும் இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தனிரக ஊட்டச்சத்துக்களும் உள்ளது .
நோனியை தொடர்ந்து சாப்பிடுவதால்
செல்களின் செயல் திறன் அதிகரிக்கும்
ரத்தம் சுத்தமாகும்
ஜீரண சக்தி பெருகும்
நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்
முடி வளர்ச்சி கூடும்
நோனி என்பது ஒரு மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவு . உலகம் முழுவது கீழ்காணும் நோய்களினால் பாதிக்கப்பட்டோர் நோனியை ஊட்டச்சத்து உணவாக பயன்படுத்துகிறார்கள் .
சக்கரை நோய்
முடக்கு வாதம்
உடல் பருமன்
புற்று நோய்
ரத்த கொதிப்பு
தலை வலி , பல் வலி
கை கால் வலி , மூட்டு வலி ,
முடி உதிர்தல்
உணவு செரிக்காமை
இருதய நோய்கள்
மலச்சிக்கல்
வயிற்று வலி ,வயிற்று புண்
சளி , காச நோய்
தோல் நோய்கள் , சொறி , சிரங்கு ,
மன அழுத்தம்
மாதவிடாய் பிரச்சினைகள்
சிறிநீரக கோளறு
ஒவ்வாமை (அலர்ஜி ), ஆஸ்த்மா ,
நரம்பு தளர்ச்சி ,
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு .
'*******************************'
மொரிண்டா சிற்றிப்போலியா என்ற பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட பழரசம் தான் இந்த நோனி , நம்ம ஊர்ல நுணா காய்னு சொல்வோம் ,
நோனி மருந்து அல்ல , மருந்துக்கும் மாற்றம் அல்ல , ஆனால் எந்த மருந்தானாலும் அதன் வீரியத்தையும் செயல் திறனையும் அதிகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவு .நோனி ஒரு அதிசியமான செல் உணவு , நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் வளர்ச்சி அடைய செய்கிறது , நமது செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஆரோக்யமாக இருக்கின்றன .அப்போது உடல் இயக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது .
ஏன் நமக்கு நோனி தேவை ?
ரசாயன உரங்களால் உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகள்
சத்தற்ற உணவு வகைகளால் உண்டாகும் நோய்கள்
மன அழுத்தம் , உடல் பருமன்
வயதாகும் நம் உடல் தன்மை
இவை அனைத்தையும் சரி செய்து உடலை சிறந்த ஆரோகியமான உடலாக வைத்து இருக்க நமக்கு ப்ரோக்செரோனின் தேவைபடுகிறது , அது நோனி அருந்துவது மூலமாக கிடக்கிறது . நோனி ப்ரோக்செரோனின் சத்தை அதிகபடுத்தி நமது உணவில் இருந்து ப்ரோட்டின் சத்து முழுவதையும் உடலில் சேர்க்க உதவுகிறது
நோனி பற்றி இன்னும் சில குறிப்புகள்
முற்றிலும் மூலிகை யால் ஆனது
நஞ்சு இல்லா சாகுபடி மூலம் நோனி வளர்கபடுகிறது
நோனி ஒரு சைவ பானம்
நோனியில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது ?
ஆண்டி ஆக்சிதேன்ஸ் , அமினோ அமிலங்கள் , ஆள்க்ளய்ட்ஸ் முதலியன மற்றும் வைட்டமின்கள் A,C,E,B, கால்சியம் , இரும்புசத்து , சிங்கு , தாமிர சத்து ,மக்னிசியம் , பாஸ்பரஸ் ,குரோமியம் , மாலிப்டினம் , நியாசின் , போலிக் அமிலம் , பாண்டோதினிக் அமிலம் , மாங்கனீசு , கார்போஹட்ரோட்ஸ் மற்றும் இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தனிரக ஊட்டச்சத்துக்களும் உள்ளது .
நோனியை தொடர்ந்து சாப்பிடுவதால்
செல்களின் செயல் திறன் அதிகரிக்கும்
ரத்தம் சுத்தமாகும்
ஜீரண சக்தி பெருகும்
நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்
முடி வளர்ச்சி கூடும்
நோனி என்பது ஒரு மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவு . உலகம் முழுவது கீழ்காணும் நோய்களினால் பாதிக்கப்பட்டோர் நோனியை ஊட்டச்சத்து உணவாக பயன்படுத்துகிறார்கள் .
சக்கரை நோய்
முடக்கு வாதம்
உடல் பருமன்
புற்று நோய்
ரத்த கொதிப்பு
தலை வலி , பல் வலி
கை கால் வலி , மூட்டு வலி ,
முடி உதிர்தல்
உணவு செரிக்காமை
இருதய நோய்கள்
மலச்சிக்கல்
வயிற்று வலி ,வயிற்று புண்
சளி , காச நோய்
தோல் நோய்கள் , சொறி , சிரங்கு ,
மன அழுத்தம்
மாதவிடாய் பிரச்சினைகள்
சிறிநீரக கோளறு
ஒவ்வாமை (அலர்ஜி ), ஆஸ்த்மா ,
நரம்பு தளர்ச்சி ,
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு .
Labels:
மருத்துவம்
Subscribe to:
Comments (Atom)




